Sindu உனது தாயின் செயலால், உனைபிரிந்து தவிக்கிறேன் இங்கு.ஆனால் உனது தாயோ நீ அவளுக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோல உனை சொந்தம் கொண்டாடுகிராள். என் உயிருக்கும் மேலான உனை என்னிடம் இருந்து பிரிப்பதன் லாபம் யாருக்கோ . !.
2 வருட நிகழ்வுகளையும் இனி நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் இந்த பக்கம் உன்னிடம் கிடைக்கும் தருவாயில் என் உணர்வுகளின் ஓட்டத்தையும் என் வலிகளின் உச்சத்தையும் காண முடியும். இன்றுடன் உனக்கு 1 வயது முடிந்து 9 மாதம் ஆகிறது. இந்த பக்கத்தில் எழுத ஆரம்பிக்கும் இத்தருவாயில் நீ என்னுடன் இல்லை. காரணம் பல இருப்பினும் வேதனையுடனே ஆரம்பிக்கிறேன் நீ என்னுடன் இல்லை என்பதால்.